/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் பதவி அதிமுக.,பிரமுகர் சுயேட்சையாக போட்டிகீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் பதவி அதிமுக.,பிரமுகர் சுயேட்சையாக போட்டி
கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் பதவி அதிமுக.,பிரமுகர் சுயேட்சையாக போட்டி
கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் பதவி அதிமுக.,பிரமுகர் சுயேட்சையாக போட்டி
கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் பதவி அதிமுக.,பிரமுகர் சுயேட்சையாக போட்டி
பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் பதவிக்கான அதிமுக வேட்பாளரை எதிர்த்து முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் ஜெ.,பேரவை ஒன்றிய செயலாளருமான சிவநாடானூர் அப்பாத்துரை போட்டியிடுகிறார். இவர் 10,17வது வார்டுகளில் போட்டியிடுவதற்காக கட்சியில் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் யூனியன் கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள செல்வமோகன்தாஸ்பாண்டியனை எதிர்த்து களத்தில் உள்ளார்.
இதுகுறித்து அதிமுக போட்டி வேட்பாளரான அப்பாத்துரையிடம் கேட்டபோது:- ''நான் 1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன். கட்சியில் பல்வேறு பொறுப்புக்களையும், கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவன். எனக்கு இரண்டு வார்டுகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தேன். அதனை நிராகரித்து விட்டனர். அதற்கு தென்காசி தொகுதி செயலாளர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தான் காரணம். அவருக்கு போட்டியாக நான் வந்துவிடக் கூடாது எனபதற்காகத்தான் திட்டமிட்டு என்னை புறக்கணித்துள்ளனர்.
இவரால் என்னைப்போல் உண்மையான கட்சிக்காரர்கள் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் மாவட்ட கவுன்சிலராக பணியாற்றிய போது 8வது வார்டு பகுதியான கல்லூரணிக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2.20 லட்சம் நிதி ஒதுக்கி கிணறு ஆழப்படுத்தி கொடுத்துள்ளேன். இதனால் இப்பகுதி அதிமுகவினர் என்னை போட்டியிடும்படி கேட்டனர். அதனால் நான் சுயேட்சையாக போட்டியிடுகின்றேன். அதிமுகவினரும், பொதுமக்களும் என்னை வெற்றி பெற செய்வார்கள்'' என்றார். அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் போட்டியிடுவது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


