/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்தென்காசி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்
தென்காசி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்
தென்காசி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்
தென்காசி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் பாட புத்தகங்கள் வினியோகம்
தென்காசி : தென்காசி கல்வி மாவட்டத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவங்கியது.
தென்காசி கல்வி மாவட்டத்தில் 109 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். இவர்களில் 1 மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பாட புத்தகங்கள் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த பாட புத்தகங்கள் பள்ளிகள் தோறும் வினியோகம் செய்யும் பணி துவங்கியது.
ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் பாட புத்தகங்களின் எண்ணிக்கை முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இப்பணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பார்வையிட்டார். மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவே பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
தென்காசி கல்வி மாவட்டத்தில் 31 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் மூலம் வினியோகம் செய்யப்பட வேண்டும். மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை விலைக்கு வாங்க வேண்டும். இதற்கான தொகையை பாங்க் டி.டி.மூலம் மெட்ரிக் பள்ளிகள் செலுத்த வேண்டும். தொகை செலுத்திய பள்ளிகளுக்கு மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் மூலம் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.