வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்
ADDED : அக் 04, 2011 11:25 AM
வால்பாறை : வால்பாறையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
நேற்று இரவு 11மணியளவில் வால்பாறை, அய்யர்பாடி எஸ்டேட், ரோப்வே பகுதியில் புகுந்த 5 காட்டு யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை அடித்து நொறுக்கி, கடையில் இருந்த அரிசி அனைத்தையும் நாசப்படுத்திவிட்டது. மேலும் அருகிலிருந்த சத்துணவுகூடத்தின் கதவையும் உடைத்து விட்டது. யானைகளின் அட்டகாசம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரின் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 3மணியளவில் யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


