Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

UPDATED : அக் 03, 2025 06:15 AMADDED : அக் 03, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
- நரேந்திர மோடி, பிரதமர்

நுாறு ஆண்டுகளுக்கு முன், விஜயதசமி புனித நாளில், ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் நிறுவப்பட்டது. இது, இந்தியாவின் தேசிய உணர்வு அவ்வப்போது ​​வெவ்வேறு வடிவங்களில், காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தொன்மையான மரபின் புதிய வெளிப்பாடாகும்.

நம் காலத்தில், இந்த சங்கம் காலத்தைக் கடந்த தேசிய உணர்வின் உருவகமாகும். ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தின் நுாற்றாண்டு விழாவை நாம் காண்பது நம் தலைமுறை சுயம்சேவகர்களின் அதிர்ஷ்டமாகும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், தேசத்திற்கும், மக்களுக்கும் சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதில் அர்ப்பணிப்புணர்வுடன் இருக்கும் எண்ணற்ற ஸ்வயம்சேவகர்களுக்கு, என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சங்கத்தின் நிறுவனர், நம் வழிகாட்டிம் பரம பூஜ்ய டாக்டர் ஹெட்கேவருக்கு மரியாதை செலுத்தி வணங்குகிறேன்.நுாறு ஆண்டுகளின் இந்த புகழ்பெற்ற பயணத்தைக் குறிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது.

ஒரே மனப்பான்மை


பெரும் நதிகளின் கரையில் மனித நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன. இதேபோல், சங்கத்தின் தாக்கத்தால் எண்ணற்ற உயிர்கள் வளம் பெற்றுஉள்ளன. ஒரு நதி அதன் நீரால் தொடும் நிலத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்வதைப் போல், சங்கம் நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் வளர்த்து உள்ளது. ஒரு நதி பெரும்பாலும் பல நீரோடைகளாகப் பெருகி அதன் தாக்கத்தை விரிவுபடுத்துகிறது. சங்கத்தின் பயணத்திலும் இதேபோன்ற தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பல்வேறு அமைப்புகள் மூலம், கல்வி, விவசாயம், சமூக நலன், பழங்குடியினர் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமாகவும் செயல்படுகிறது. அவர்கள் பணியாற்றும் துறைகள் வேறுபட்டிருந்தாலும், அவை அனைத்தும் 'தேசமே முதன்மையானது' என்ற ஒரே மனப்பான்மையையும், தீர்மானத்தையும்கொண்டுள்ளதாக இருந்து வருகிறது.

நாட்டை சிறப்பாகக் கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.தலைசிறந்த ஆளுமை திறன் மூலம் நாட்டைக் கட்டமைத்தல் என்ற தலைமைத்துவப் பண்பை வளர்த்துக் கொள்வதே இந்த சங்கத்தின் பாதையாக இருந்து வருகிறது. இதற்காக, அந்த அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளைத் தனித்துவமான, எளிமையான மற்றும் நீடித்த நெறிமுறைகளை உருவாக்கியது.

முதன்மை பணி


ஷாகா என்பது ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் 'நான் என்பதிலிருந்து நாம்' என்ற பயணத்தைத் தொடங்கி, தனிப்பட்ட மாற்றத்தின் செயல்முறையின் மூலம் வழிநடத்தி செல்லும் உத்வேகமான முறையாகும். இந்த சங்கம் நிறுவப்பட்ட தருணத்திலிருந்தே, நாட்டின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை முதன்மைப் பணியாக கருதியுள்ளது. பரம பூஜ்ய டாக்டர் ஹெட்கேவர் மற்றும் பல்வேறு ஸ்வயம்சேவகர்களும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.

டாக்டர் ஹெட்கேவர் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். சங்கம் பல சுதந்திரப் போராளிகளுக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்கியது. சுதந்திரத்திற்குப் பின், சங்கம் தொடர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. பல தசாப்தங்களாக, பழங்குடியின சமூகங்களின் பாரம்பரியம், பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஆர்.எஸ்.எஸ்., தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உள்ளது.

இன்று, சேவா பாரதி, வித்யா பாரதி, ஏகல் வித்யாலயா மற்றும் வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற நிறுவனங்கள் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வலுவான அமைப்புகளாக உருவெடுத்துள்ளன.

பெரும் சவால்கள்


பல நுாற்றாண்டுகளாக, சாதி பாகுபாடு, தீண்டாமை போன்ற சமூகக் கேடுகள் ஹிந்து சமூகத்திற்கு பெரும் சவால்களாக இருந்து வருகின்றன. டாக்டர் ஹெட்கேவர் காலத்திலிருந்து இன்று வரை, சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு சர்சங்கசாலக்கும், அத்தகைய பாகுபாட்டிற்கு எதிராகப்போராடியுள்ளனர்.தற்போது, சர்சங்கசாலக், மரியாதைக்குரிய மோகன் பகவத், ஒற்றுமைக்கான தெளிவான அழைப்பை விடுத்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us