Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ்களில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

பஸ்களில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

பஸ்களில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

பஸ்களில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

ADDED : அக் 02, 2011 01:46 AM


Google News

திருப்பூர் : பல்லடம் - குண்டடம் செல்லும் பஸ்களில், டிக்கெட் கட்டணத்தை விட, கூடுதலாக ஆறு ரூபாய் வசூலிப்பதால், பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.கோவையில் இருந்து பல்லடம் வழியாக செல்லும் பஸ்களில், பல்லடத்தில் இருந்து குண்டடம் செல்ல, டிக்கெட் கட்டணம் 9 ரூபாய்; சில பஸ்களில் 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

சில நாட்களாக, பல்லடத்தில் இருந்து குண்டடம் செல்ல, டிக்கெட் கட்டணம் 15 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

கோவையில் உள்ள பஸ் டிப்போ அதிகாரியிடம் கேட்ட போது, 'எக்ஸ்பிரஸ் பஸ்கள், பைபாஸ் வழித்தடங்கள் மற்றும் எல்.எஸ்.எஸ்., தொலைதூர பஸ்கள், குறிப்பிட்ட ஸ்டாப்களில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படுகிறது. 'பைபாஸ் வழித்தட பஸ்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் விரைவு பஸ்களை, பல்லடத்தை அடுத்து ஒட்டன் சத்திரத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்; குண்டடத்தில் பஸ்சை நிறுத்தக் கூடாது. ஆனால், பல்லடத்தில் ஏறுவோர் பலரும் குண்டடத்தில் இறங்குவதால், ஒட்டன்சத்திரம் பயணத்துக்குரிய கட்டணம்வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ்களை பல்லடத்தில் நிறுத்தாமல் சென்றால், பயணிகள் புகார் செய்கின்றனர். நிறுத்தி ஏற்றும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது கட்டாயமாகிறது. இதனால், எக்ஸ்பிரஸ், பைபாஸ் வழித்தட பஸ் களில் பயணிகள் ஏறாமல் தவிர்ப்பது நல்லது,' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us