/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நகரில் சுற்றும் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்ப முடிவுநகரில் சுற்றும் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்ப முடிவு
நகரில் சுற்றும் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்ப முடிவு
நகரில் சுற்றும் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்ப முடிவு
நகரில் சுற்றும் கால்நடைகளை காப்பகத்துக்கு அனுப்ப முடிவு
ADDED : ஆக 11, 2011 04:48 AM
ஊட்டி:'கால்நடைகளை நகர பகுதிகளில் மேய விட்டால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்,' என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஊட்டியில்
சுற்றிவரும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க, நகர மன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பேரில், கடந்த மாதம் முதல் சாலைகளில்
சுற்றி திரியும் கால்நடைகள் 'ஐபான்' அமைப்பின் உதவியுடன் பிடிக்கப்பட்டு
அபராதம் விதிக்கப்படுகிறது. குதிரைகளுக்கு 500 ரூபாயும், மாடுகளுக்கு 200
ரூபாயும், ஆடுகளுக்கு 50 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. 'அபராதம்
கட்டிய பின்னரும் தங்கள் கால்நடைகளை தொடர்ந்து சாலைகளில் மேய்ச்சலுக்கு
விட்டால், அவைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். உரிமையாளர்கள்
கால்நடைகளை கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்,' என நகராட்சி கமிஷனர் குமார்
எச்சரித்துள் ளார்.