Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/முடங்கியது சாட்ஜிபிடி: இந்தியா, அமெரிக்காவில் பயனாளர்கள் அவதி

முடங்கியது சாட்ஜிபிடி: இந்தியா, அமெரிக்காவில் பயனாளர்கள் அவதி

முடங்கியது சாட்ஜிபிடி: இந்தியா, அமெரிக்காவில் பயனாளர்கள் அவதி

முடங்கியது சாட்ஜிபிடி: இந்தியா, அமெரிக்காவில் பயனாளர்கள் அவதி

UPDATED : ஜூன் 10, 2025 06:20 PMADDED : ஜூன் 10, 2025 06:18 PM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் திடீரென முடங்கியது. இதனை அதிகம் பயன்படுத்தும் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும் ஏஐ சாப்ட்வேரில் ஒன்று. பைல் தயாரிப்பு, ஆவணங்கள் சரிபார்த்தல், கோடிங் என பல பயன்பாடுகளுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜி பிடி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.

இந்நிலையில், சாட் ஜிபிடி சேவை திடீரென சர்வதேச அளவில் முடங்கியது. அதில் இருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. எதுவும் செய்ய முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக இதனை அதிகம் பயன்படுத்தும் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்தியாவில் மாலை 3:00 மணிக்கு சாட் ஜிபிடி முடங்கியதாக, 800க்கும் மேற்பட்டோர் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்தியாவில் புகார் தெரிவித்தவர்களில் 88 சதவீதம் பேர் , சாட் ஜிபிடி பதில் சொல்லவில்லை எனவும், 8 சதவீதம் பேர் மொபைல் செயலி தொடர்பாகவும், 3 சதவீதம் ஏபிஐ தொடர்பாகவும் புகார் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் 7 சதவீதம் பேர் மொபைல் செயலி தொடர்பாகவும், 1 சதவீதம் பேர் ஏபிஐ தொடர்பாகவும், மற்றவர்கள் அதன் செயல்பாடு தொடர்பாகவும் புகார் தெரிவித்து உள்ளனர். சாட் ஜிபிடி முடங்கியதை உறுதி செய்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், அதனை சரி செய்து வருவதாக தெரிவித்து உள்ளது. அதேநேரத்தில் எப்போது சரி செய்யப்படும் என்ற தகவலை வெளியிடவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us