Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நூலகத்துக்கு புதிய படைப்புகள் பெறாததால் அதிருப்தி : பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்

நூலகத்துக்கு புதிய படைப்புகள் பெறாததால் அதிருப்தி : பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்

நூலகத்துக்கு புதிய படைப்புகள் பெறாததால் அதிருப்தி : பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்

நூலகத்துக்கு புதிய படைப்புகள் பெறாததால் அதிருப்தி : பழைய நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2011 09:10 PM


Google News
திருப்பூர் : எழுத்தாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு புதிய படைப்புகளை பெற்று, மாவட்ட நூலகங்களுக்கும் அனுப்பும் நடைமுறை கடந்த 2009 முதல் பின்பற்றப் படுவதில்லை.

இதன் காரணமாக, புதிய நூல்களை வாசகர்கள் வாசிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால், எழுத்தாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நூலகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத் திலும் மாவட்ட நூலகம், கிளை நூலகம் என சுமார் 2,500 நூலகங்கள் உள்ளன.நூலகங்களில் உள்ள கோடிக்கணக்கான புத்தகங்களை, எண்ணற்ற வாசகர்கள் வாசித்து, பயனடைந்து வருகின்றனர். நூலகங்களில் அதிகமானவர்களை உறுப்பினராக்குவது, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேம்படுத்த போட்டி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வந்தன.அதேபோல், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், நூலகங்களை மேம்படுத்தும் வகையிலும் எழுத்தாளர்கள் புதிதாக எழுதி வெளியிடும் நூல்களை நூலகங்களுக்கு பயன்படுத்தும் திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு, தங்கள் படைப்புகள் தொடர்பாக, எழுத்தாளர்கள் நூலகத் துறைக்கு விண்ணப்பிப்பர். அதன் பின், நூலக தேர்வு குழுவினர் அந்நூலை ஆய்வு செய்து, தகுதியானவற்றை நூலகத்துக்காக பெறுவர்.இத்திட்டத்தின் கீழ் எழுத்தாளர்களிடம் இருந்து 500 பிரதிகள் நூலகத்துறைக்கு பெறப்படுவது வழக்கம். கடந்த தி.மு.க., ஆட்சியில் 1,000 பிரதியாக உயர்த்தப்பட்டது. 300 பக்கங்களுக்கு அதிகமுள்ள புத்தகங்கள், 500 பிரதிகள் பெறப்பட்டன. பதிப்பகம் நிர்ணயித்துள்ள விலையில் இருந்து, 20-30 சதவீதம் குறைவான விலையில் எழுத்தாளர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்படும். அவை, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நூலகங்களுக்கு வினியோகிக்கப்படும். கடந்த 2008 வரை இந்நடைமுறை அமலில் இருந்தது. ஆனால், 2009 முதல் எழுத்தாளர்களின் புத்தகங்களை, நூலகத்துறை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் நூலகத்துறையில் வழங்கப்படுவதில்லை. இதனால், எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை நூலகங்களில் வாசிக்க முடியாத நிலை வாசகர்களுக்கு ஏற்பட்டுள்ளதோடு, எழுத்தாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்க அதிகமான தொகை செலவிடப்பட்டதால், போதுமான நிதி இல் லாத காரணத்தால், இப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நூலக வரியை நூலக பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி, நூலகங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனி டம் கேட்டபோது,''கடந்த 2009 முதல் எழுத்தாளர்களின் புத்தகங்கள் நூலகத்துறையில் பெறப்படுவதில்லை. இதற்கு தேவையான விண்ணப்பங்களை, சென்னையில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இணைய தளத்திலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்கின்றனர். ஆனால், அதிலும் பயன்படுத்த முடிவதில்லை. ''எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை பெற்று, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்புவது, எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும். வாசகர்களும் இலவசமாக நூல்களை படித்து பயனடைய முடியும். எழுத்தாளர் மற்றும் வாசகர் சமுதாயம் என இரு தரப்பினருக்கும் பயன்தரக் கூடிய இம்முறையை நூலகத்துறை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us