Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா

எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா

எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா

எமர்ஜென்சி நினைவுகளை மறக்கக்கூடாது: அமித்ஷா

UPDATED : ஜூன் 25, 2025 07:45 PMADDED : ஜூன் 25, 2025 06:12 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: '' எமர்ஜென்சியின் நினைவுகளை ஒரு போதும் மறக்கக்கூடாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

பிரதமர் மோடி எழுதிய 'The Emergency Diaries: Year that forged our leaders' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசியதாவது:

இன்று நாம் சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் இருண்ட பக்கத்தை நினைவு கூர ஒன்று சேர்ந்துள்ளோம். எமர்ஜென்சியின் நினைவுகளை மனதில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற நிலை மீண்டும் ஏற்படாது. மேலும், இளைஞர்கள் பண்பட்டவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்வார்கள். இதற்காக தான், ஜூன் 25ம் தேதியை 'Samvidhan Hatya Diwas' ஆக கொண்டாட பிரதமர் முடிவு செய்தார்.

எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி இளம் தலைவராக 19 மாதங்கள் பங்கேற்றார். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற பிரதமர், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை ஏற்பாடு செய்தார். அந்த காலத்தில் நாளிதழ்கள் ரகசியமாக அச்சிடப்பட்டன. அதனை சந்தைகளிலும், மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மோடி விற்பனை செய்தார். 24 - 25 வயதில் குஜராத்தில் அவரது தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

25 வயது இளைஞராக இருந்த போது, அப்போது பிரதமர் ஆக இருந்த இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்தவர் மோடி. அதே தலைவர் தான், 2014ல் வாரிசு அரசியல் என்ற எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கான காரணத்தை வேரோடு அழித்துள்ளார். சர்வாதிகாரத்தை அழிக்க போராட்டம் நடத்திய இளைஞர் தான் தற்போது நாட்டின் ஜனநாயகத்தின் வேரை பலப்படுத்தி வருகிறார். எமர்ஜென்சியின் போது நீதித்துறையில் தலையிட்ட இந்திரா, பத்திரிகை சுதந்திரத்தையும் நசுக்கினார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us