/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குளுனி பள்ளி விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் அசத்தல்குளுனி பள்ளி விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் அசத்தல்
குளுனி பள்ளி விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் அசத்தல்
குளுனி பள்ளி விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் அசத்தல்
குளுனி பள்ளி விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் அசத்தல்
ADDED : ஜூலை 24, 2011 12:14 AM
புதுச்சேரி : குளுனி பள்ளி விழாவில் மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது.
லாஸ்பேட்டை குளுனி பள்ளி விளையாட்டு விழா, பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. மாணவியர் தலைவி மஞ்சு பிரியா வரவேற்றார். முதல்வர் எமிலியானா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தலைமை செயலர் சந்திரமோகன், கல்வி செயலர் ராஜீவ் யதுவன்ஷி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் குளுனி மாகாணத் தலைவி தெரெசா, தலைமை சகோதரி ஜாக்குலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. ஒலிம்பிக் சுடர் வலம் வர உறுதி மொழி ஏற்கப்பட்டது. துவக்க நிகழ்ச்சியில் 11ம் வகுப்பு மாணவிகள் கையில் கேடயம், ஈட்டி ஏந்தி ஆப்ரிக்க நடனமாடினர். பின் ஆப்பிரிக்க பாரம்பரிய உடையுடன் வலம் வந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கிரீடம் சூட்டினர். 6, 7ம் வகுப்பு மாணவிகள் காட்டின் சின்னத்தை தோற்றுவித்து அதில் மலர்கள், விலங்குகள், வானவில் இருப்பதை போன்று வடிவமைத்து பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தனர். மழலைகள் தனிமங்களின் அட்டவணை அமைத்து, அதன் அருகே தண்ணீரை ஊற்றாய் வரவழைத்து பாராட்டை பெற்றனர். ஆரம்ப பள்ளி மாணவிகள் மாசுபட்ட காற்றினால் மரங்கள் கருகுவதையும், தூய காற்றினால் மலர்கள் பூத்து குலுங்குவதையும் பல வண்ணங்களால் சித்தரித்தனர். விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியில் வெள்ளி விழா காணும் ஆசிரியர்களும், ஆசிரியர் பெற்றோர் சங்கம், பள்ளி நிர்வாகம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டு துறையில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவியர் துணை தலைவி ஷாரன் நன்றி கூறினார்.