/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்களை போலீசார் கைது செய்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ADDED : செப் 17, 2011 02:50 AM
குற்றாலம் : காசிமேஜர்புரத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புகழ்மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் குற்றாலத்திற்கும், செங்கோட்டை மற்றும் புண்ணிய தலமாக விளங்கி வரும் இலஞ்சி குமரன் கோவிலுக்கும் இடைப்பட்ட ஊர் காசிமேஜர்புரம்.
இக்கிராமத்தின் வழியாக குற்றால ஜீவநதி ஓடி எங்கும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தில் சுமார் 8 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.காசிமேஜர்புரம் கிராம பெண்கள் நலன் கருதி பொதிகை நகர் என்ற பகுதியில் இலவச கழிப்பிடம் கட்டப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கழிப்பிடம் எவ்வித பராமரிப்பும் இன்றி பாழடைந்து விஷசெடி கொடிகளுடனும், நச்சு பாம்புகளின் கூடாரமாக உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் திறந்தவெளி பகுதியையே கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.மேலும் இப்பகுதியில் கழிவு நீரோடை வசதியும் இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி தெப்பக்குளம் போல் பெருகி கொசுக்களின் கூடாரமாக காட்சியளிப்பதால் பல்வேறு தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காசிமேஜர்புரம் பொதிகைநகரில் காட்சிப் பொருளாக உள்ள இலவச கழிப்பறையை பராமரித்தும், கழிவு நீரோடை வசதி செய்து தரவும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.