/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு இல்லை இந்திய கம்யூ., (எம்.எல்.) குற்றச்சாட்டுபுதிய கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு இல்லை இந்திய கம்யூ., (எம்.எல்.) குற்றச்சாட்டு
புதிய கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு இல்லை இந்திய கம்யூ., (எம்.எல்.) குற்றச்சாட்டு
புதிய கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு இல்லை இந்திய கம்யூ., (எம்.எல்.) குற்றச்சாட்டு
புதிய கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு இல்லை இந்திய கம்யூ., (எம்.எல்.) குற்றச்சாட்டு
ADDED : செப் 01, 2011 01:32 AM
காரைக்கால் : பெருகி வரும் மாணவர்கள் தேவைக்கு ஏற்ப புதிதாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்க பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை என இந்திய கம்யூ., (எம்.எல்.) குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாய நிலங்களை தாரை வார்த்துவிட்டு, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பட்ஜெட்டில் தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. விவசாய நிலங்களை பாதுகாக்க பசுமை வளையம், நகர்புற விவசாயம் பற்றி எந்தவித உத்தரவாதமும் இல்லை. காரைக்காலில் அனல்மின் நிலையம், விமான நிலையம் என பல நூறு ஏக்கர் விவசாய நிலத்தை கபளீகரம் செய்துவிட்டு, விவசாயத்திற்கு முதலீடு, மான்யம் என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். நெல் விளைச்சலுக்கு ஹெக்டேருக்கு 5000 ரூபாய் மான்யம் கொடுத்தும் விளைச்சல் குறைந்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கூட்டுறவு ஆலைகளை மேம்படுத்தும் அறிவிப்புகள் இல்லை. கடற்கரை மட்டுமே உள்ள மாநிலத்தில் அனல் மின் நிலையம் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும். பெருகிவரும் மாணவர் தேவைக்கு ஏற்ப புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் துவங்கும் திட்டம் எதுவும் இல்லை. மாறாக தனியார் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.