/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு கேபிள் "டிவி' பெயரில் அதிக கட்டணம் வசூல்அரசு கேபிள் "டிவி' பெயரில் அதிக கட்டணம் வசூல்
அரசு கேபிள் "டிவி' பெயரில் அதிக கட்டணம் வசூல்
அரசு கேபிள் "டிவி' பெயரில் அதிக கட்டணம் வசூல்
அரசு கேபிள் "டிவி' பெயரில் அதிக கட்டணம் வசூல்
ADDED : செப் 07, 2011 10:28 PM
தேனி : தேனி மாவட்டம் கம்பத்தில், அரசு கேபிள் 'டிவி' பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, கேபிள் ஆபரேட்டர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கம்பத்தில் அரசு கேபிள் டிவி' ஒளிபரப்பு இன்னும் துவக்கப்படவில்லை. மதுரை ஆகாஷ் கேபிள் பொறுப்பாளராக இருப்பவர், கம்பத்தில் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் அனுமதி பெற்றுள்ளதாக கூறி வருகிறார். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு அதிக கட்டணம் கேட்டு எங்களை நிர்பந்தம் செய்கிறார். பணம் கட்டாவிட்டால், சிக்னல் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர், என தெரிவித்துள்ளனர்.