மத்திய அமைச்சர்கள் பதவியேற்றபோது தோன்றிய மர்ம மிருகம்: ஜனாதிபதி மாளிகையில் 'சஸ்பென்ஸ்'
மத்திய அமைச்சர்கள் பதவியேற்றபோது தோன்றிய மர்ம மிருகம்: ஜனாதிபதி மாளிகையில் 'சஸ்பென்ஸ்'
மத்திய அமைச்சர்கள் பதவியேற்றபோது தோன்றிய மர்ம மிருகம்: ஜனாதிபதி மாளிகையில் 'சஸ்பென்ஸ்'
UPDATED : ஜூன் 10, 2024 03:49 PM
ADDED : ஜூன் 10, 2024 03:14 PM

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பின்போது ஜனாதிபதி மாளிகையில் மர்ம விலங்கு நடந்து செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (ஜூன் 9) இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். அத்துடன் மோடியை தவிர்த்து 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
இந்நிலையில் பதவியேற்பு விழாவின்போது பா.ஜ., எம்.பி., துர்கா தாஸ் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டபோது மாளிகையின் பின்னால் உட்புறம் சிறுத்தை போன்ற மர்மமான விலங்கு சர்வசாதாரணமாக நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்த மர்ம விலங்கு, சிறுத்தையா அல்லது பெரிய சைஸ் பூனையா, அல்லது வேறு ஏதேனும் விலங்கா எனத் தெரியவில்லை. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தபோது இந்த மர்ம விலங்கு எப்படி வந்தது என கேள்வி எழுந்துள்ளது.