/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியால் மக்கள் பீதிவேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியால் மக்கள் பீதி
வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியால் மக்கள் பீதி
வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியால் மக்கள் பீதி
வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியால் மக்கள் பீதி
ADDED : செப் 18, 2011 01:26 AM
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவேரிப்பட்டணம் அடுத்த சாப்பரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அப்பகுதியை சேர்ந்தவர் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இங்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான அடமான நகைகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வங்கியில் உள்ள நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம கும்பல் வங்கியின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வங்கி லாக்கரை உடைக்க முயன்ற போது, அலாரம் ஒலி எழுப்பியதால், அப்பகுதி மக்கள் வங்கியை நோக்கி ஓடி வந்தனர். இதனால், வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். கொள்ளை சம்பவம் நடக்காததால் வங்கியில் இருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது. தகவல் அறிந்த டி.எஸ்.பி., ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ.,அமுதா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வங்கி ஷட்டரில் இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


