Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அங்கன்வாடி மையத்தில் திருட்டு

அங்கன்வாடி மையத்தில் திருட்டு

அங்கன்வாடி மையத்தில் திருட்டு

அங்கன்வாடி மையத்தில் திருட்டு

ADDED : ஜன 08, 2025 02:53 AM


Google News
அங்கன்வாடி மையத்தில் திருட்டு

போச்சம்பள்ளி, : மத்துார் அடுத்த, கரடிகொல்லப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு அங்கன்வாடி பணியாளர் சுகந்தி, வழக்கம்போல் பணிக்கு சென்று பார்த்தபோது, பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முன்னிலையில் உள்ளே சென்று பார்த்தபோது சமையல் காஸ் சிலிண்டர், குக்கர், மிக்ஸி மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் திருடு போயிருந்தன. புகார் படி மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளியில் மரபு உணவு திருவிழா கண்காட்சி

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில், அக்ரிசக்தி சார்பில், மரபு உணவு திருவிழா கண்காட்சி நடந்தது. நாளந்தா பள்ளியின் தாளாளர் கொங்கரசன் கண்காட்சியை திறந்து வைத்தார். இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர். 20 நிறுவனங்கள் சார்பில், கறுப்பு கவுனி, பச்சை மிளகாய் ஐஸ்கிரீம், பனங்கிழங்கு மால்ட், கம்பு கேக், மூங்கிலால் ஆன போர்வைகள், துண்டுகள், சித்த மருத்துவ புத்தகங்கள், தேயிலை துாள், நெல்லிக்காயினால் ஆன பலவிதமான பொருட்கள், காகித கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட அட்டைகள், பேக்கேஜிங் பொருட்கள், திருநெல்வேலி கூழ் வத்தல், கோழி முட்டை, நேந்திரன் பவுடர் போன்றவைகளை காட்சி படுத்தியிருந்தனர்.

அத்துடன், விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு எவ்வாறு விலை நிர்ணயிக்கலாம் என, அக்ரிசக்தி சார்பில், ஸ்னாக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவன முதன்மை செயல் அதிகாரி அருள்முருகன் எடுத்துரைத்தார். மதியம், பார்வையாளர்களுக்கு, 200 ரூபாயில் பாரம்பரிய அரிசி, தின்பண்டங்கள் கொண்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர் உணர்வுகள் அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி, அக்ரிசக்தி சுழல் விருதை, டாக்டர் சிவராமன் வழங்கினார். நிகழ்ச்சியில், டாக்டர் விக்ரம்குமார், நாளந்தா பள்ளி முதல்வர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாகிகள் கவுதம், புவியரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us