/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு நல்லாசிரியர் விருதுதிருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு நல்லாசிரியர் விருது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 03, 2011 12:28 AM
திருச்சி: தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது.
கடந்த கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுபேர் விருதுக்கு தேர்வானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து, புத்தூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, பாலக்கரை சையத் முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தம், வடுகர்பேட் டை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தமிழரசி, பெருவளப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானம், பெருமாள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகாண்டீபன் ஆகிய ஆறுபேர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினத்தன்று சென்னையில் நடக்கும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நல்லாசிரியர் விருதுகள் அனைத்தும் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கானது. இன்னும் மெட்ரிக்., துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உள்ளிட்டவைகளுக்கு நல்லாசிரியர் விருதுகள் இன்றோ, நாளையே அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.