/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் அரைகுறைவிழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் அரைகுறை
விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் அரைகுறை
விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் அரைகுறை
விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் அரைகுறை
ADDED : ஆக 11, 2011 11:11 PM
விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலைய கால்வாய் சீரமைப்பு பணிகள் துவங்கிய நிலையில் அரைகுறையுடன் கைவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கும் மழை நீரை அகற்ற அமைச்சர் சண்முகம் கடந்த 7ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி மழை நீரை வெளியேற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதற் கட்டமாக பஸ் நிலையம் அருகே சென்ற நீர் வரத்து வாய்க்காலை அடைப்புகளை சீர் செய்திடவும், எதிரே உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி வழக்கமான வழியில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பின் நிரந்தர திட்டம் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்திச் சென்றார். இதனையடுத்து மறுநாளே நெடுஞ்சாலைத் துறையினர் பஸ் நிலையம் எதிரே சென்ற வாய்க்காலில் செடி, கொடிகளை அகற்றினர். ஒரு சில மணி நேரங்கள் மட்டும் பொக்லைன் மூலம் நடந்ததோடு சரி, அரைகுறையுடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பஸ் நிலையம் முன் செடி, கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அருகே கொட்டி வைத்தவர்கள் அதனைக் கூட அகற்றாமல் விட்டுள்ளனர். இதனால் பஸ்சுக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றத்தால் அவதியடைந்து வருகின்றனர்.