/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பி.எட்.,தேர்ச்சி விவரங்களை இணைய தளத்தில் பதிய வாய்ப்புபி.எட்.,தேர்ச்சி விவரங்களை இணைய தளத்தில் பதிய வாய்ப்பு
பி.எட்.,தேர்ச்சி விவரங்களை இணைய தளத்தில் பதிய வாய்ப்பு
பி.எட்.,தேர்ச்சி விவரங்களை இணைய தளத்தில் பதிய வாய்ப்பு
பி.எட்.,தேர்ச்சி விவரங்களை இணைய தளத்தில் பதிய வாய்ப்பு
ADDED : செப் 01, 2011 01:27 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பி.எட்., சான்றிதழ்கள் வழங்கப்படும் கல்லூரிகளிலேயே வேலை வாய்ப்பிற்கு பதியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பி.எட்., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளிலேயே இணைய தளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற தங்கள் கல்லூரிக்கு செல்லும் போது, ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டப் படிப்பு வரை பதிந்த வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். தாங்கள் படித்த கல்லூரிகளில் கூடுதலாக பி.எட்., கல்வி தேர்ச்சியை இணைய தளத்தின் மூலமாக பதிந்து கொள்ளலாம். ஏற்கனவே வேலை வாய்ப்பகத்தில் பதிந்து புதுப்பிக்காதவர்கள் மற்றும் வேலை வாய்ப்பகத்தில் பதியாதவர்களும் தங்கள் பெயர் உள்ள ரேஷன் கார்டு, பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் பி.எட் .,சான்றிதழையும் அன்றே இணையதளம் மூலம் பி.எட்., படித்த கல்லூரிகளில் புதிதாக பதிந்து கொள்ளலாம். மாவட்டத்தில் பி.எட்.,தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.