/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் : முத்திரை பதிக்கும் வேளாண் நிலையம்புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் : முத்திரை பதிக்கும் வேளாண் நிலையம்
புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் : முத்திரை பதிக்கும் வேளாண் நிலையம்
புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் : முத்திரை பதிக்கும் வேளாண் நிலையம்
புதிய நெல் ரகம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் : முத்திரை பதிக்கும் வேளாண் நிலையம்
புதிய நெல் ரகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பொன்னி, புனிதவதி, பாரதிதாசன், ஜவகர், அரவிந்தர், சுப்ரமணிய பாரதி ஆகிய நெல் ரகங்களைத் தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டில், அன்னலட்சுமி என்ற நெல் ரகத்தை புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதில், புனிதவதி, ஜவகர், அன்னலட்சுமி போன்ற நெல் ரகங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. புதுச்சேரி விவசாயிகள் மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளும் இந்த ரகங்களைப் பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, புதிய நெல் ரகத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் மகசூல், சன்னரகம், நோய் எதிர்ப்பு சக்தி போன்ற சிறப்புகளுடன் புதிய நெல் ரகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நெல் ரகம் பரிசோதனைக்காக மற்ற ஆராய்ச்சி மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெல் ரகத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. பல்வேறு சோதனைகளுக்குப் பின், வரும் ஆண்டில் புதிய நெல் ரகத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
சிறப்பு ஊதியம் வழங்கப்படுமா : காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் 20 விஞ்ஞானிகள், 40 தொழில்நுட்ப அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சம்பள உயர்வு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், விஞ்ஞானிகள் மனசோர்வுடன் பணியாற்றும் அவலம் உருவாகி உள்ளது. புதிய நெல் ரகங்களையும், புதிய சாகுபடி தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்கும்போது, சிறப்பு சம்பள உயர்வு அளித்தால் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப அலுவலர்களும் அதிக ஊக்கமுடன் பணியாற்றுவர். புதிய, புதிய கண்டுபிடிப்புகளும் விவசாயிகளுக்குக் கிடைக்கும். ஆராய்ச்சி நிறுவனமாக அறிவிக்கப்படுமா வேளாண் அறிவியல் நிலையத்துக்குத் தேவையான தொகையை புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது. மத்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் நிதியுதவி அளிக்கிறது. இந்தத் தொகை போதுமானதாக இல்லை. வேளாண் அறிவியல் நிலையத்தை, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக அரசு அறிவித்தால், பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வெளியில் இருந்து நேரடியாக நிதி திரட்டிக் கொள்ள முடியும்.
-நமது சிறப்பு நிருபர்-