ADDED : ஜூலை 25, 2011 12:29 AM
உளுந்தூர்பேட்டை : தகராறின்போது பணத்தை திருடியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரைச் சேர்ந்தவர் ஆனந்தமூர்த்தி, 35. இவர் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செண்பகவேலுவிடம் கணக்கராக பணி புரிகிறார். இவருக்கும், கூ.கள்ளக்குறிச்சி கொளஞ்சி,32 என்பவருக்கும் நேற்று முன்தினம் நடந்த கோவில்பாட்டுக் கச்சேரியின் போது தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது தன்னை தாக்கிவிட்டு, லாரியில் இருந்த 74 ஆயிரம் ரூபாய் பணத்தை கொளஞ்சி எடுத்துச் சென்றதாக ஆனந்தமூர்த்தி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிந்து கொளஞ்சியை கைது செய்தனர்.