/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/தி.மு.க., வேட்பாளரை நீக்க கோரி நடந்த உண்ணாவிரதம் வாபஸ்தி.மு.க., வேட்பாளரை நீக்க கோரி நடந்த உண்ணாவிரதம் வாபஸ்
தி.மு.க., வேட்பாளரை நீக்க கோரி நடந்த உண்ணாவிரதம் வாபஸ்
தி.மு.க., வேட்பாளரை நீக்க கோரி நடந்த உண்ணாவிரதம் வாபஸ்
தி.மு.க., வேட்பாளரை நீக்க கோரி நடந்த உண்ணாவிரதம் வாபஸ்
ADDED : செப் 27, 2011 12:21 AM
நாகர்கோவில் : நாகர்கோவில் நகராட்சி தி.மு.க., வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி நடந்த உண்ணாவிரத போராட்டம் பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது.
நாகர்கோவில் நகராட்சி சேர்மன் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக மேரிஜெயனட்விஜிலா ஜெயசிங் அறிவிக்கப்பட்டுள் ளார். இதற்கு தி.மு.க., பெண் நிர்வாகிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேட்பாளரை மாற்ற கேட்டு நாகர்கோவில் நகர துணை செயலாளர் லதா, மகளிரணி பொன்.மரியம்மாள் இருவரும் தலைமை அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மூன்றாம் நாளாக உண்ணாவிரதம் இருந்த அவர்களுக்கு ஆதரவாக மகளிர் அணியினர் சிலரும் அமர்ந்தனர். இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஆதரவாக பெண்கள் சிலர் வந்தனர். மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக கூறினர். இதனால் தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பு உருவானது.சுரேஷ்ராஜன் போலீசில் புகார்: தி.மு.க., மாவட்ட தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஆதரவாக வந்த மகளிர் சிலர் கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து தாக்க முயற்சிப்பதாக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை ஹெலன்டேவிட்சன் எம்.பி., போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைமையில் இருந்து வந்து பேசினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என அவர்கள் கூறினர். இதையடுத்து மாநில அமைப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசியபோது போராட்டத்தில் ஈடுபட் டுள்ளவர்களுடன் கருணாநிதியும், ஸ்டாலினும் பேச விரும்புவதாகவும், எனவே போராட்டத்தை முடித்துக் கொண்டு உடனடியாக சென்னைக்கு வரும்படியும் கூறினார். இதையடுத்து ஹெலன் டேவிட்சன் எம்.பி., உண்ணாவிரதம் இருந்த லதா மற்றும் பொன்மரியம்மாள் இருவருக்கும் பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட இருவரும் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு öச்ன்றனர்.