முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்
UPDATED : செப் 21, 2011 11:47 AM
ADDED : செப் 21, 2011 10:29 AM
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய அணை கட்டும் திட்டத்தில் மாற்றும் எண்ணமில்லை என அம்மாநில அமைச்சர் ஜேசாப் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் கேரளா அணையில் நீர்மட்டத்தை உயர்த்தாமல் அணைகள் குறித்து புதிய சட்டத்தையும் கொண்டுவந்து. இந்நிலையில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜெ. ஜோசப் ,தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில், முல்லை பெரியாறில் ரூ. 666 கோடி செலவில் புதிய அணை கட்ட முடிவு செய்து, இதற்கான முழு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.
புதிய அணை கட்டும் திட்டத்தின்படி பேபி அணையை உடைத்து ,42 அடி ஆழத்தில் புதிய அணை கட்டி முல்லை பெரியார் அணையில் நீரை திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. முல்லை பெரியார் அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நியமித்து நிபுணர் குழுவிடம் வரும் செப்.29-ம் தேதி அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அணை கட்டும் திட்டத்திற்கான கால அவகாசம் வரும் செப்.30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாகவே, நிபுணர்கள் குழுவினரிடம் , செப்.29-ம் தேதியே கேரளா , புதிய அணை கடடும் அறிக்கையினை அளித்ததாகவும் கூறப்படுகிறது.