ராஜா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ராஜா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ராஜா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 03, 2011 05:01 PM
ADDED : அக் 03, 2011 11:59 AM
ஊட்டி: நீலகிரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க.
எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையி்ல் உள்ளார் முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜா. இவர் நீலகிரி லோக்சபா எம்.பி.யாக உள்ளார். இவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதனால் ராஜா எம்.பி. அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


