மத்தியபிரதேசத்தில் ஹசாரே ஆதரவாளர் சுட்டுக்கொலை
மத்தியபிரதேசத்தில் ஹசாரே ஆதரவாளர் சுட்டுக்கொலை
மத்தியபிரதேசத்தில் ஹசாரே ஆதரவாளர் சுட்டுக்கொலை
ADDED : ஆக 17, 2011 02:09 AM

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தவலறியும் உரிமை சட்ட பெண் ஆர்வலர் ஒருவர் மர்ம ஆசாமியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போபாலில் உள்ள தனது வீட்டின் வாசல் முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பூஷ் கோ-ஈ ஃபைசா நகரைச் சேர்ந்தவர் ஷீலா மசூத்(39). இவர் தகவலறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் மட்டுமின்றி காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். மேலும் வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலராகவும் இருந்து வந்தார். மிரக்கில் எனும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். சம்பவத்தன்று நேற்று காலை 11 மணியளவில் தனது வீட்டிலிருந்து கார் மூலமாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். கார் மெயின் கேட்டை விட்டு வெளியே வந்தது. அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம ஆசாமி ஒருவன் ஷீலாமசூத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டான். காரின் முன்புறத்தில் டிரைவர் இருக்கை அருகில் உட்கார்ந்த நிலையில் ஷீலாமசூத் பலியானதாக காவல்துறை சூப்பிரண்டு ஆதர்ஷ்கத்தியார் தெரிவித்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் டில்லியில் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் , அவரது பெண் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.