Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!

UPDATED : மே 13, 2025 01:37 PMADDED : மே 13, 2025 12:31 PM


Google News
Latest Tamil News
சண்டிகர்: எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-பாக்., போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று (மே 13) ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானுக்கு அளித்த பதில் தாக்குதல் குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இந்த விமானப்படை தளத்தை தான், பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களை பரப்பியது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில், இன்று பிரதமர் மோடியின் பயணம், வீரர்களின் கலந்துரையாடல் அமைந்துள்ளது.

வீரர்களைச் சந்தித்தேன்!

ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டு பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன்.

துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us