முதல்வர் ஜெ.,வுக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முதல்வர் ஜெ.,வுக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முதல்வர் ஜெ.,வுக்கு தபால் அனுப்பும் போராட்டம்
ADDED : செப் 10, 2011 01:17 AM
தேவகோட்டை :''கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.,18ல் முதல்வர் ஜெ.,வுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும்,'' என, தேவகோட்டையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் அப்துல்மஜீத் தெரிவித்தார்.அவர் கூறுகையில்:மாநிலத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களை கல்வித்துறை அலுவலக பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.
இதனால், மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகிறது. ஆசிரியர்கள் வருகை பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் கண்காணிக்கும் திட்டம் தர்மபுரி, கடலூரில் செயல்படுகிறது. இதை தவிர்த்து, வருகை பதிவில் புதிய முறையை அமல்படுத்தலாம். ஆசிரியர்களுக்கான டிரான்ஸ்பர் கவுன்சிலிங் மூன்று மாதங்களாக நடத்தவில்லை. காலிப்பணியிடங்களில் தற்போதுள்ள ஆசிரியர்களை டிரான்ஸ்பர் மூலம் நிரப்பிவிட்டு, பின் புதிய ஆசிரியர்களை நியமிக்கலாம். தி.மு.க., ஆட்சியில் 5,600 பேரை தேர்வு செய்து சான்று வழங்கியும், பள்ளிகளில் இன்னும் நியமிக்கவில்லை. இலவச கல்வி சட்டம் அறிவித்தும், கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். ஆசிரியர்களின் சேமநலநிதி மாதம் 210 கோடி ரூபாய் வசூலிக்கின்றனர். அது எங்கே செல்கிறதென தெரியவில்லை. சம்பள முரண்பாடு பற்றி தொடர்ந்துகூறி வருகிறோம். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.,18 அன்று முதல்வர் ஜெ.,வுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளோம் என்றார். மாநில துணை பொது செயலாளர் தமிழரிமா, மாநில குழு தனீஸ்லாஸ், வடிவேலு உடனிருந்தனர்.