/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரதிதாசன் கல்லூரியில் ஈவ்ஸ் நிர்வாகிகள் தேர்வுபாரதிதாசன் கல்லூரியில் ஈவ்ஸ் நிர்வாகிகள் தேர்வு
பாரதிதாசன் கல்லூரியில் ஈவ்ஸ் நிர்வாகிகள் தேர்வு
பாரதிதாசன் கல்லூரியில் ஈவ்ஸ் நிர்வாகிகள் தேர்வு
பாரதிதாசன் கல்லூரியில் ஈவ்ஸ் நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 27, 2011 11:44 PM
புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கத்திற்கு 2011-2012ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.முன்னாள் தலைவர் இலந்தியா வரவேற்றார்.
ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை பிந்துபாலன் தலைமை தாங்கினார். ரோட்டரி ஈவ்ஸ் முன்னாள் தலைவர் மேரிகலா முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் குணசேகரன் சிறப்புரையாற்றினார். ஈவ்ஸ் தலைவர் ஜெரால்டின், செயலாளர் முகுந்தமாலா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கல்வியாண்டில் 45க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நேற்று சேர்ந்தனர்.ஆங்கிலத் துறை மாணவி தனலட்சுமி தலைவராகவும், கலைச்செல்வி துணைத் தலைவராகவும், ஷெர்லி மார்ட்டினாமேரி செயலாளராகவும், ரூபி ஜோஸ்பின்மேரி இணை செயலாளராகவும், வரலாற்றுத் துறை மாணவி உமாபிரியா ஐஸ்வர்யா பொருளாளராகவும், மனை அறிவியல் மாணவிகள் பூங்கொடி, ஆர்த்தி, வரலாற்றுத்துறை மாணவிகள் மரகதம், விஜி ஆகியோர் இயக்குனர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.