Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பா.ஜ., தலைவர்களுக்கும் பங்கு: குமாரசாமி குற்றச்சாட்டு

பா.ஜ., தலைவர்களுக்கும் பங்கு: குமாரசாமி குற்றச்சாட்டு

பா.ஜ., தலைவர்களுக்கும் பங்கு: குமாரசாமி குற்றச்சாட்டு

பா.ஜ., தலைவர்களுக்கும் பங்கு: குமாரசாமி குற்றச்சாட்டு

ADDED : ஆக 14, 2011 07:47 PM


Google News

மைசூரு: ''சட்ட விரோத சுரங்கத்தொழில் மூலம் சம்பாதித்த பணம், பா.ஜ., தேசிய தலைவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது,'' என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் குமாரசாமி மைசூருவில் கூறியதாவது:கடந்த 2002 முதல் 2006 வரை கர்நாடக பா.ஜ., அரசு மேற்கொண்ட முடிவுகள் குறித்து மட்டுமே லோக் ஆயுக்தா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், லோக் ஆயுக்தாவுக்கு பல சரியான தகவல்களை தெரிவிக்க வில்லை. இதில், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தேவையான ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் என்னிடம் உள்ளது.லோக் ஆயுக்தாவின் அடுத்த நடவடிக்கையை பரிசீலித்து, இந்த ஆதாரங்கள் வெளியிடப்படும்.லோக் ஆயுக்தா, தனது அறிக்கையில், என் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சட்ட விரோத சுரங்க தொழிலில் சம்பாதித்த பணம், பா.ஜ.,வின் மத்திய தலைவர்கள் சிலருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் தக்க நேரத்தில் சரியான தகவல்கள் அளிப்பேன்.சட்ட விரோத சுரங்க தொழிலின் சிருஷ்டி கர்த்தாக்களே காங்கிரஸ் தலைவர்கள். எனவே, வரும் நாட்களில், காங்கிரஸாரும் இந்த ஊழலில் சிக்கவுள்ளனர், என்பதில் சந்தேகமில்லை.மூடி மறைக்கப்பட்ட பைல்களை வெளியே கொண்டு வந்து, சரியான விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவை கேட்டுக் கொள்கிறேன்.சுரங்க முறைகேடு குறித்து லோக் ஆயுக்தா அறிக்கை வெளி வருவதற்கு நானே தான் காரணம். இதில், காங்கிரஸார் எந்த வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. என்னை சக்ர வியூகத்தில் சிக்க வைக்க காங்கிரஸ், பா.ஜ.,வினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. பா.ஜ., தலைவர்கள் பலரும் ஊழலில் சிக்கி தவிக்கின்றனர்.என் மீது லோக் ஆயுக்தா அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதன் முழு உண்மைகள் குறித்து, இரு நாட்களில் ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்துவேன். லோக் ஆயுக்தா அறிக்கைக்கு பயந்து, நான் மவுனமாக இருக்கவில்லை,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us