பா.ஜ.,விற்கு வழிவிட்டு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பு: உதயநிதி பிரசாரம்
பா.ஜ.,விற்கு வழிவிட்டு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பு: உதயநிதி பிரசாரம்
பா.ஜ.,விற்கு வழிவிட்டு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பு: உதயநிதி பிரசாரம்
ADDED : ஜூலை 08, 2024 12:14 PM

விழுப்புரம்: பா.ஜ.,விற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது என அமைச்சர் உதயநிதி கூறினார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, தும்பூர் கிராமத்தில் உதயநிதி பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்களைப் பார்த்து பயம். பா.ஜ., வை பார்த்து பயம். பா.ஜ.,விற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. தொடர் தோல்வி பயத்தால் அ.தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
1 லட்சம் ஓட்டுகள்
நீட் விவகாரத்தில் தி.மு.க., அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டும் என சொல்லும் பா.ஜ.,வோடு பா.ம.க., கூட்டணி வைத்துள்ளது. விக்கிரவாண்டி தி.மு.க., வேட்பாளரை, 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. புதுமை பெண் திட்டத்தின் கீழ், 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், 1.16 கோடி பேருக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.