அறிவியல் ஆயிரம்
பொறியாளருக்கு பெருமை
செப்டம்பர் 15ம் நாளை பொறியாளர் தினமாக கொண்டாடுகின்றோம்.
தகவல் சுரங்கம்
இந்தியாவின் முதல்தூக்கு தண்டனை
சுதந்திர இந்தியாவில், முதல் தூக்கு தண்டனை காந்தியடிகளைக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேக்கும், கொலைக்கு உடந்தையாக நாராயணன் ஆப்தேக்கும் வழங்கப்பட்டது. 1949 நவம்பர் 15ல் அம்பாலா சிறையில் தான் தூக்கு தண்டனை நிறைவேறியது.தூக்கு தண்டனைக்கு முந்தைய கோட்சேயின் ஆசை 'பிரிக்கப்படாத அகண்ட பாரதத்தில் பாயும் சிந்து நதியில் தன்னுடைய அஸ்தியைக் கரைக்க வேண்டும்' என்பதாகும். கோட்சேயின் ஆசை இன்னும் நிறைவேறவில்லை. ஏனெனில் சிந்து நதி பாகிஸ்தானில் பாய்கிறது. எனவே கோட்சேயின் குடும்பத்தினர் அவரது அஸ்தியை பாதுகாத்து வருகின்றனர். கோட்சே குறித்த விசாரணையும், தண்டனையும் இந்தி, மராட்டி நாடக உலகில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'மீ நாதுராம் கோட்சே போல்தாய்', 'நான் கோட்சே பேசுகின்றேன்' என்ற மராட்டிய மொழி நாடகம், பார்லிமென்ட் வரை பரபரப்பை ஏற்படுத்தி நாடகத்தை நிறுத்தும் சூழ்நிலை உருவாகியது.


