PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

1. சமீபத்தில் தெற்கு சீனாவின் யாங்சி ஆற்றுப்படுகையில் பன்றியின் பல் எச்சத்தைத்தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதன் வாயிலாக, காட்டுப் பன்றிகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்காக வளர்க்கும் வழக்கம் 8,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவில் தோன்றிவிட்டது தெரியவந்துள்ளது.
![]() |
2. பூமியில் இருந்து 2.8 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது கேலக்ஸி சோம்ப்ரெரோ. இது நம் பால்வெளி மண்டலத்தை விட இரண்டு மடங்கு சிறியது. அகச்சிவப்பு கேமராவைக் கொண்டு இதை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். இது வட்ட வடிவ சக்கரம் போல் காணப்படுகிறது. இந்தப் படம் அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
![]() |
3. ஸ்பெயின் நாட்டில், ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர்தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப்பட்டுள்ளது. இது 43,000 ஆண்டுகள் பழமையானது. உலக வரலாற்றிலேயே மிகப் பழமையான, முழுமையாகக் கிடைத்த நியாண்டர்தாலின் கைரேகை இதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
![]() |
4. கியூபா நாட்டின் குகை ஒன்றில் ஒரு பறவை எலும்பு தொல்லெச்சத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 18,000 ஆண்டுகள் பழமையான இந்த எலும்பு அழிந்துபோன ஒரு வாத்து இனத்தினுடையது என்கின்றனர். இந்த வாத்து இன்றுள்ள வாத்துகளை விடச் சிறியது. இதற்கு, அமேசொனெட்டா க்யூபென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
![]() |
5. ஆஸ்திரிய நாட்டின் வியன்னா பல்கலை சிம்பன்சி குரங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. அந்த ஆய்வில், குரங்குகள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள மரங்கள் மீது வெவ்வேறு விதமான தாளங்கள் இடுவது தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு முன்பாகவே இசையைப் பயன்படுத்தியவை சின்பன்சிகள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.