/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பருவ மழையின் தாக்கம் தீவிரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்குபருவ மழையின் தாக்கம் தீவிரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பருவ மழையின் தாக்கம் தீவிரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பருவ மழையின் தாக்கம் தீவிரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பருவ மழையின் தாக்கம் தீவிரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
ADDED : ஜூலை 24, 2011 02:48 AM
கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடரும் பருவ மழையால் ஓவேலி வனப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கோடையில் வறண்டு காணப்பட்ட ஓவேலி பகுதிகளில், பருவ மழையின் தாக்கம் காரணமாக ஆறுகளில் தற்போது நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. ஓவேலியில் உள்ள பசுமையான வனப்பகுதி நடுவே வெள்ளி நிறத்தில் பாய்ந்து செல்லும் ஆற்று நீர், மலைகள் இடையே வரும் போது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கோழிக்கோடு வழியாக செல்லும் உள்ளூர் வாசிகளும், கேரளாவிலிருந்து ஊட்டி உள்ளிட்ட பகுதிக்கு கோழிக்கோடு சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும் ஓவேலி பகுதியில் காணப்படும் அருவிகளை வெகுவாக ரசித்து செல்கின்றனர்.


