Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/"இது வக்ப் சொத்து அல்ல" - கோர்ட் மூலம் வெளியான திடுக் தகவல்

"இது வக்ப் சொத்து அல்ல" - கோர்ட் மூலம் வெளியான திடுக் தகவல்

"இது வக்ப் சொத்து அல்ல" - கோர்ட் மூலம் வெளியான திடுக் தகவல்

"இது வக்ப் சொத்து அல்ல" - கோர்ட் மூலம் வெளியான திடுக் தகவல்

UPDATED : ஜூன் 01, 2025 09:00 AMADDED : மே 31, 2025 01:53 PM


Google News
Latest Tamil News
லக்னோ : அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டி இது வக்ப் சொத்து என அனுபவித்து வந்த நீண்ட கால சர்ச்சை ஒன்று கோர்ட் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றமே இதுகுறித்து அதிர்ச்சியடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

உ.பி., மாநிலம் சஹாரன்பூரில் வக்ப் பெயரில் பெரும் நிலத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் கட்டடங்கள் கட்டி இதன் மூலம் பெரும் வாடகை, வருமானத்தை ஒரு டிரஸ்ட் மூலம் சிலர் அனுபவித்து வந்துள்ளனர். இது தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது வக்ப் மதரஸாவை சேர்ந்த 'காசிம் உல் உலூம்' என்பவர் 2011ல் கோர்ட்டை நாடினார். இதற்கு உரிய ஆவணங்களை கோர்ட் கேட்டது. கீழ் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடியானது.

இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இங்கும் விசாரணை மனுதாரருக்கு சாதகமாக கிடைக்கவில்லை. இந்த மனு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது. 1995 ஆம் ஆண்டு வக்ப் சட்டத்தின் கீழ் சொத்து வக்ப் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை. அந்த நிலம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்றும், வக்ப்பின் வாதம் வெறும் வாய்மொழி மட்டுமே என்றும், இது எந்த வகையிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் ஆச்சரியம்

இந்த சொத்துக்கள் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர் என்றும், ஆச்சரியமாக இருப்பதாகவும், இது ஒரு தனித்துவமான வழக்காக கருதுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவை

மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சொத்து யாருக்கு உரிமை உள்ளது, இதில் கலெக்டர் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவை கோர்ட்டில் விவாத பொருளாக உள்ளது. இவ்வாறு இருக்கும் போது இது போன்ற தீர்ப்புகள் உபி.,யில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us