ADDED : செப் 27, 2011 12:22 AM
காரைக்குடி:பி.எஸ்.என்.எல்., செய்தி குறிப்பு: சந்தாதாரர்களின் வசதிக்காக நேற்று (செப்.26) முதல் வரும் 30ம் தேதி வரை ரூ.100 முதல் 1100 வரை 'டாப் அப்' செய்பவர்களுக்கு முழுமையாக பேசிக்கொள்ளும் வசதி (புல் டாக்டைம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தவிர, செப்.28, 29ம் தேதிகளில் ராமநாதபுரம், கொந்தகை மற்றும் புதுப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், 29, 30ம் தேதி சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் அருகிலும் பி. எஸ்.என்.எல்., 'இலவச சிம்கார்டு' வழங்கும் சிறப்பு மேளா நடக்கவுள்ளது. பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், இருப்பிட சான்றுக்கான நகலை கொடுத்து 'சிம்கார்டு' பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.