அசாமில் மணிக்கூண்டு கோபுரம் கட்ட காந்தி சிலை அகற்றம்
அசாமில் மணிக்கூண்டு கோபுரம் கட்ட காந்தி சிலை அகற்றம்
அசாமில் மணிக்கூண்டு கோபுரம் கட்ட காந்தி சிலை அகற்றம்
UPDATED : ஜூலை 13, 2024 12:12 AM
ADDED : ஜூலை 12, 2024 11:32 PM

கவுஹாத்தி: மணிக்கூண்டு கோபுரம் கட்டுவதற்காக காந்தி சிலையை இடித்து அப்புறப்புறத்திய சம்பவம் பா.ஜ. ஆளும் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.
அசாம் மாநிலம் தின்சுயக்கியா மாவட்டம் டூம்டுமா என்ற இடத்தில் முக்கிய சாலைகள் சந்திக்கும் காந்தி சவுக் என்ற இடத்தில் 5 அடி உயர காந்தி சிலை உள்ளது. இந்த இடத்தில் மணிக்கூண்டு கோபுரம் கட்டுவதற்கு அம்மாநில ஆளும் பா.ஜ. அரசு முடிவு செய்தது.
இதையடுத்து நேற்று காந்திசிலையை சுற்றியுள்ள சுற்றுச்சுவர்களை இடிக்கப்பட்டன. பின் காந்தி சிலையை கிரேன் மூலம் அகற்றினர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மாநில அரசின் இச்செயலுக்கு அசாம் காங்., கட்சி, மாணவர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ. முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறியது, காந்திசிலை அகற்றப்படுவது குறித்து எனக்கு தெரியாது. மாவட்டம் நிர்வாகம் தான் முடிவு செய்து சிலையை அகற்றியுள்ளதாக தெரிய வருகிறது என்றார்.