ADDED : ஜூலை 20, 2011 09:12 PM
தேவகோட்டை:தேவகோட்டை
சண்முகநாதபுரம் பி.எஸ்.எஸ்.
உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வேதாந்திர
மகரிஷி மன்றத்தால் மனவளக்கலை பயிற்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியை
ராமதிலகம் தலைமை வகித்தார். மன்ற ஆசிரியர் நடராஜன், மனவளக்கலை யோகாசனம்,
உடற்பயிற்சி அகத்தாய்வு, காயகல்ப பயிற்சி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி
வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்
முத்துகணேசன் நன்றி கூறினார்.