/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பஸ் விபத்தில் பலியான 14 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவுபஸ் விபத்தில் பலியான 14 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
பஸ் விபத்தில் பலியான 14 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
பஸ் விபத்தில் பலியான 14 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
பஸ் விபத்தில் பலியான 14 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
ADDED : செப் 06, 2011 12:02 AM
திருச்சி: மணப்பாறை அருகே நடந்த கோர விபத்தில் பலியான 14 பேரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு 15 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் தொட்டியப்பட்டி கிராமம், கோவில்பட்டி லஞ்சமேடு என்ற இடத்தில் இன்று (நேற்று) மதியம் மணப்பாறையிலிருந்து இலுப்பூர் சென்ற தமிழக அரசு நகர பஸ் - புதுச்சேரியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சம்பவ இடத்திலேயே 14 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் அகால மரணமடைந்த குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துககும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 7 பேருக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று எனது பிரார்த்தனையை தெரிவிக்கிறேன். பலத்த காயமடைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். லேசான காயமடைந்த 37 பேரும் விரைவில் குணமடைய வேண்டும். அவர்களுக்கு தலா 6000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.