ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் அத்வானி சந்திப்பு
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் அத்வானி சந்திப்பு
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் அத்வானி சந்திப்பு
UPDATED : செப் 21, 2011 11:40 AM
ADDED : செப் 21, 2011 09:28 AM
நாக்பூர்: பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி , ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதற்காக நாக்பூர் சென்றுள்ள அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பாகவத்தை சந்தித்து பேசுகிறார். முன்னதாக ஊழலுக்கு எதிராக யாத்திரை துவங்கப்போவதாக செப்.8-ம் தேதி அறிவித்திருந்தார். அதற்கு முன்பு பா.ஜ. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் விவாதிக்கவுள்ளார். விரைவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
அடுத்த மாதம் (அக்டோபர் 11-ம் தேதி) குஜராத் மாநிலத்தின் , சர்தார் பட்டேல் பிறந்த ஊரிலிருந்து யாத்திரை துவங்க அத்வானி அறிவித்திருக்கும் யாத்திரைக்கும், (பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கும் குறைந்த நாட்களே உள்ளது. அதுமட்டுமின்றி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன மற்றும் பா.ஜ. தேசிய நிர்வாகக்குழுக்கூட்டமும் செப்.30 மற்றும் அக்.1-ம் தேதி நடக்கிறது. இவற்றை கவனத்தில் கொண்டு யாத்திரை ரத்து செய்வதா , வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கவுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரியும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் வேண்டி அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் தேசிய அளவில் பா.ஜ. செல்வாக்கு அதிகரித்துள்ளது.