ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு: காடேஸ்வர சுப்பிரமணியம்
ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு: காடேஸ்வர சுப்பிரமணியம்
ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு: காடேஸ்வர சுப்பிரமணியம்
ADDED : ஜூன் 11, 2025 02:38 AM

மதுரை: ''மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பலரும் அவதுாறாக பேசி வருகின்றனர். ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே மாநாடு நடத்தப்படுகிறது,'' என, மதுரையில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
மதுரையில் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி ஏற்பாட்டில் முருகபக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்காக அறுபடை வீடுகளில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட வேலுக்கு வண்டியூர் ஹிந்து முன்னணி அலுவலகத்தில் பூஜையும், யாகமும் நடந்தது. மாநாடு வரை தினமும் இந்நிகழ்வு நடக்கும்.
நேற்று மாநாடு நடக்கும் இடத்தை மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பார்வையிட்டு கூறியதாவது:
மாநாடு குறித்து அவதுாறாக பல்வேறு அமைப்பினர் பேசி வருகின்றனர். ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவே நடத்தப்படுகிறது. கிறிஸ்துவர்கள் சென்னிமலை தங்களுடையது எனக்கூறியது குறித்து எந்த கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாகவும் இம்மாநாடு நடக்கிறது. இது திருப்பு முனையாக அமையும். முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுத்தால் அவரை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுப்போம்.
ரஜினி வருகிறார்
அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர் நிச்சயம் வருகிறேன் எனக்கூறியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு 'முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உண்மையான பக்தர்கள் வர மாட்டார்கள்' என ஏன் அவர் கவலைப்பட வேண்டும்.
'ஜூலை 7 திருச்செந்துார் குடமுழுக்கு விழா மாநாட்டிற்குதான் மக்கள் வருவார்கள்' எனக்கூறுகிறார்.
கடவுள் இல்லை என்று கூறியவர்கள் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர்.
தாராளமாக நடத்தட்டும். ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 2026ல் சட்டசபை தேர்தல் வருகிறது. சிறுபான்மையினர் ஓட்டு பறிபோய்விடுமோ என்று எண்ணத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர்.
மதுரையில் மாநாட்டை தடுக்க எங்கள் மீது போலீசார் பொய்யாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார்.