/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சர்க்கரை நோயாளிகளுக்கு தொடு உணர்வு பரிசோதனைசர்க்கரை நோயாளிகளுக்கு தொடு உணர்வு பரிசோதனை
சர்க்கரை நோயாளிகளுக்கு தொடு உணர்வு பரிசோதனை
சர்க்கரை நோயாளிகளுக்கு தொடு உணர்வு பரிசோதனை
சர்க்கரை நோயாளிகளுக்கு தொடு உணர்வு பரிசோதனை
ADDED : ஜூலை 27, 2011 11:26 PM
செஞ்சி : செஞ்சியில் சர்க்கரை நோயாளிகளுக்கு தொடு உணர்வு பரிசோதனை முகாம் நடந்தது.நீண்ட நாள் சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு தொடு உணர்வு குறைபாடு ஏற்படுகிறது.
இவர்களின் கால், கைகளில் வெப்பம், குளிர்ச்சி, தொடு உணர்வு ஆகியவை குறைய துவங்குகிறது. இதனால் காயம் ஏற்படும் போதும், தேள், எலி மற்றும் பூச்சிகள் கடிக்கும் போதும் இது குறித்து உணர்வு ஏற்படுவதில்லை. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், சில நேரம் உறுப்புகளை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.இது போன்ற தொடு உணர்வு குறைபாட்டை அறிந்து கொள்ள சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச தொடு உணர்வு முகாம் செஞ்சி காளியப்பா மருத்துவமனையில் நடந்தது.ஒகார்ட் நிறுவனத்தின் நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்யும் புதிய கருவி மூலம் இந்த ஆய்வு நடந்தது. சர்க்கரை நோய், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மாரிமுத்து மேற்பார்வையில், ஒகார்ட் மண்டல மேலாளர் கமலக்கண்ணன், மேலாளர் பிரகாஷ் ஆகியோர் பரிசோதனைகளை செய்தனர்.