சந்தனமரம் திருட்டு : தனிப்படை அமைப்பு
சந்தனமரம் திருட்டு : தனிப்படை அமைப்பு
சந்தனமரம் திருட்டு : தனிப்படை அமைப்பு
ADDED : ஜூலை 23, 2011 01:08 AM
கூடலூர் : குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் ரோட்டில் பெரியவளைவு அருகே சந்தனமரம் வெட்டி, அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ரேஞ்சர் சுரேஷ்பாபு விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இதே பகுதியில் மூன்று சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுவரை கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து நடக்கும் சந்தனமரக் கடத்தலைத் தடுக்க தனிப்படை அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.