/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி அருகே மேலும் சமணப் படுகைகள்:அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தகவல்செஞ்சி அருகே மேலும் சமணப் படுகைகள்:அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தகவல்
செஞ்சி அருகே மேலும் சமணப் படுகைகள்:அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தகவல்
செஞ்சி அருகே மேலும் சமணப் படுகைகள்:அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தகவல்
செஞ்சி அருகே மேலும் சமணப் படுகைகள்:அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தகவல்
ADDED : ஆக 23, 2011 11:51 PM
செஞ்சி : செஞ்சி அருகே மேலும் சமணப்படுகைகள் இருப்பதை ஆய் வாளர்கள் கண்டு
பிடித்துள்ளனர்.
செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் மூலம்
தமிழ்நாட்டில் சமணம் குறித்து அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு நடத்தி
வருகிறார். இவர் செஞ்சி பகுதியில் நடத்திய ஆய்வு குறித்து கூறியதாவது:
செஞ்சி பகுதியில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் சோழங்குணம் கிராமத்தில் உள்ள
கோபுரம் குன்றில், தரைப்பகுதியில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் தெற்கு
மற்றும் கிழக்கு திசையில் பெரிய அளவிலான பொந்துக்கள் காணப்படுகின்றன.
கிழக்கில் உள்ள பொந்தில் தமிழ் நாட்டிற்கு வரும் வட இந்திய ஜைன துறவிகள்
தங்கி தியானம் செய்கின் றனர் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த
பொந்துக்களை முற்காலம் தொட்டே ஜைன துறவிகள் பயன்படுத்தி உள்ளனர். தெற்கில்
உள்ள பொந்தில் 16-17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இதில்
புலியுடன் போரிடும் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதில் இறந்து
கிடக்கும் நாயின் சிற்பமுகத்தையும் வடித்துள்ளனர். இந்த நடுகல்லை கோபுரம்
குன்று கண்ணன் என இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம்
இப்பகுதி காடுகளில் முன்பு புலிகள் இருந்தது தெரிய வருகிறது. கெங்கம்பூண்டி
கிராமத்தில் ஊருக்கு ஒரு கி.மீ., தொலைவில் மலை குன்று ஒன்று உள்ளது.
இக்குன்றில் 20 மீட்டர் உயரத்தில் தென் கிழக்கில் குகை தளம் ஒன்று உள்ளது.
இதன் முன்பாக வெட்ட வெளி பாறையில் தெற்கு நோக்கி ஐந்து படுக்கைகளை
வடித்துள்ளனர். இதே போல் குகையின் உள்ளே கிழக்கு நோக்கி ஐந்து படுகை,
மேற்கு நோக்கி ஐந்து படுகை என மொத்தம் 15 படுகைகள் உள்ளன. அனைத்திலும்
தலைத் திண்டுகளையும் அமைத்துள்ளனர். இவை இதுவரை கண்டறியப்படாத
சமணப்படுகைகள். இந்த குன்றின் வடபகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த மக்கள்
வாழ்ந்ததற்கான கல்வட்டங்களும், பானை ஓடுகளும் காணப்படுகின்றன. இதன் மூலம்
சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளில் இருந்து இப்பகுதியில் மனிதர்கள்
வாழ்ந்துள்ளனர் என்பதையும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணத்துறவிகள்
உறைவிடமாக பயன்படுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது என்றார். இந்த ஆய்வில்
கள்ளப்புலியூர் ராமச்சந்திரன். கெங்கபுரம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி
தமிழரசன் ஆகியோர் உதவியாளர்களாக செயல்பட்டனர்.