/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மைத்ரேயி தற்கொலை தடுப்பு மையத்தில் கவிதை, கட்டுரை போட்டிகளுக்கு பெயர் பதிவுமைத்ரேயி தற்கொலை தடுப்பு மையத்தில் கவிதை, கட்டுரை போட்டிகளுக்கு பெயர் பதிவு
மைத்ரேயி தற்கொலை தடுப்பு மையத்தில் கவிதை, கட்டுரை போட்டிகளுக்கு பெயர் பதிவு
மைத்ரேயி தற்கொலை தடுப்பு மையத்தில் கவிதை, கட்டுரை போட்டிகளுக்கு பெயர் பதிவு
மைத்ரேயி தற்கொலை தடுப்பு மையத்தில் கவிதை, கட்டுரை போட்டிகளுக்கு பெயர் பதிவு
ADDED : செப் 04, 2011 01:40 AM
புதுச்சேரி:மைத்ரேயி தற்கொலை தடுப்பு நிறுவனம் நடத்தும் கவிதை, கட்டுரை,
விவாத போட்டிகளுக்கு பெயர் பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.புதுச்சேரியில்
மைத்ரேயி தற்கொலை தடுப்பு நிறுவனம் கடந்த 19 ஆண்டு களாக தற்கொலை தடுப்பு
சேவையை இலவசமாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பள்ளி
கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு கவிதை, கட்டுரை, விவாத போட்டிகள் நடத்தி
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இந்தாண்டிற்கான பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கான விவாத போட்டி 'உதவி கேட்பது வீரம் அல்லது கோழைத்தனம்' என்ற
தலைப்பிலும், கட்டுரைப்போட்டி 'தற்கொலைகளை தடுக்கும் வழிமுறைகள்' என்ற
தலைப்பிலும் நடைபெற உள்ளது.'துன்பம் நேர்கையில்' என்னும் தலைப்பில்
நடைபெறும் கவிதை போட்டியில் பொதுமக்கள் கவிதை எழுதி அனுப்பி பங்கேற்கலாம்.
விவாதம், கட்டுரைப் போட்டியில் பங்கு பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பின்புறமுள்ள
ஆல்பா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தங்களது பள்ளி, கல்லூரி முதல்வர்களிடம்
உரிய அனுமதி சான்றிதழ் பெற்று பங்கேற்கலாம்.விவாத போட்டியில் இருவர் கொண்ட
ஒரு அணியாக பங்கேற்க வேண்டும்.
ஒருவர் தலைப்பை ஆதரித்தும் மற்றொருவர்
தலைப்பை எதிர்த்தும் பேச வேண்டும். விவாத போட்டியில் பங்கு பெறுவோர்,
கட்டுரைப்போட்டியில் பங்கு பெற விரும்பினால் தனி நேரம் ஒதுக்கப்படும்.
கவிதைப் போட்டியில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் தங்கள் கவிதைகளை வரும்
20ம் தேதிக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ அனுப்பலாம்.மேலும்
விபரங்களுக்கு மைத்ரேயி, 255, தியாகு முதலியார் வீதி, புதுச்சேரி என்ற
முகவரியிலோ அல்லது 0413-2339999 என்ற தொலைபேசி எண்ணில் தினமும் மதியம் 2
மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை மைத்ரேயி
செயலாளர் செந்தில் வேலன் தெரிவித்தார்.