/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனுமதியின்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைதுஅனுமதியின்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
அனுமதியின்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
அனுமதியின்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
அனுமதியின்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
ADDED : செப் 15, 2011 10:53 PM
புதுச்சேரி:அரியாங்குப்பம் அருகே அனுமதியின்றி வெடிமருந்து பொருட்களை
பதுக்கி வைத்திருந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் ஓடைவெளி பள்ளிக்கூட வீதியில் இரவில் அடிக்கடி ஆள் நடமாட்டம் இருந்தது அப்பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன்
தலைமையில் போலீசார் ஓடைவெளியில் சந்தேகத்திற்குரிய மூன்று வீடுகளைச் சுற்றி
வளைத்து சோதனையிட்டனர்.
சோதனையில் வீடுகளிலிருந்த அனுமதியின்றி பதுக்கி
வைக்கப்பட்டிருந்த வெடி உப்பு, சல்பர், அலுமினியம் சிப்ஸ், கோன், சனல்
உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினர்.அங்கிருந்து தப்பி ஓட முயன்ற குமாரவேல்
(எ) வினோத், 26, தவளக்குப்பம் முத்துக்குமார், 27, யுவராஜ் , 20 ஆகியோரை
போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த இரண்டு வீச்சரிவாள்களைக்
கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கொலை, அடிதடி
வழக்குகள் நிலுவையில் உள்ளது. எதிர்தரப்பினரை கொலை செய்ய வெடிகுண்டு
பதுக்கி வைத்திருந்தனரா என்பது குறித்து அரியாங்குப்பம் போலீசார் தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.