செந்தில் பாலாஜி மனு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
செந்தில் பாலாஜி மனு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
செந்தில் பாலாஜி மனு: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
UPDATED : ஜூலை 18, 2024 06:05 PM
ADDED : ஜூலை 18, 2024 05:23 PM

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் கூட தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிப்பதால் ஜாமின் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, திங்கட்கிழமை செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
காவல் நீட்டிப்பு
செந்தில்பாலாஜியின் காவல் 48 வது முறையாக ஜூலை 22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.