/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேசிய கொடி ஏந்தி நடுரோட்டில் படுத்து தியாகி மகன் போராட்டம் தேசிய கொடி ஏந்தி நடுரோட்டில் படுத்து தியாகி மகன் போராட்டம்
தேசிய கொடி ஏந்தி நடுரோட்டில் படுத்து தியாகி மகன் போராட்டம்
தேசிய கொடி ஏந்தி நடுரோட்டில் படுத்து தியாகி மகன் போராட்டம்
தேசிய கொடி ஏந்தி நடுரோட்டில் படுத்து தியாகி மகன் போராட்டம்
ADDED : ஜூலை 18, 2024 04:53 PM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வடக்கு தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம், 62, காலை 8:30 மணிக்கு வீட்டிற்கு எதிரே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கையில் தேசிய கொடி ஏந்தி, தலையில் காந்தி குல்லாவுடன், கதர் வேட்டி, சட்டையுடன் ரோட்டில் படுத்து போராட்டம் நடத்தினார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பினர். போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இதுகுறித்து சோமசுந்தரம் கூறியதாவது:
வீட்டிற்கு கழிவுநீரில் இறங்கி, நடந்து செல்ல வேண்டியுள்ளது. பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் பயனில்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராடினேன். என் தந்தை சுதந்திர போராட்ட தியாகி என்பதால், அந்த உணர்வுடன் அந்த தோற்றத்துடன் பங்கேற்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, ஊராட்சி ஊழியர்கள் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.