/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மலர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன் மலர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன்
மலர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன்
மலர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன்
மலர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன்
ADDED : ஜூலை 18, 2024 06:27 AM

பரமக்குடி, : பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி மாத பிறப்பையொட்டி மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
ஆடி மாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை முதல் இரவு வரை அபிஷேக ஆராதனைகள் மற்றும் கோயில்களில் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல் என கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆடி மாதம் முதல் நாளில் முத்தாலம்மன் கோயிலில் மூலவருக்கு மலர் பாவாடை அலங்காரம், மலர் கிரீடம், பூ திருவாச்சி என அலங்காரமாகினார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.