ADDED : ஜூலை 18, 2024 06:25 AM

பரமக்குடி : - பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் அனுமந்த வாகனத்தில் பெருமாள் ராம அவதாரத்தில் எழுந்தருளினார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் தினமும் பல்வேறு அவதாரங்களில் அன்னம், சிம்மம், சேஷ, கருட வாகனத்தில் அருள் பாலித்தார்.
நேற்று ராமாவதாரத்தில் வில், அம்பு ஏந்தி ராஜா ராமனாக அனுமந்த வாகனத்தில் அலங்காரமாகி வீதி உலா வந்தார். மேலும் நின்ற திருக்கோலத்தில் ஒரு கையில் கிளி ஏந்தி, மறு கையில் கதாயுதத்துடன் முத்து பல்லக்கில் வலம் வந்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்துடன் யானை வாகனத்தில் அமர்ந்து, ஆண்டாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.