/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேலப்பாளையம் மண்டலத்தை பிரித்து நகராட்சியாக அறிவிக்க கோரிக்கைமேலப்பாளையம் மண்டலத்தை பிரித்து நகராட்சியாக அறிவிக்க கோரிக்கை
மேலப்பாளையம் மண்டலத்தை பிரித்து நகராட்சியாக அறிவிக்க கோரிக்கை
மேலப்பாளையம் மண்டலத்தை பிரித்து நகராட்சியாக அறிவிக்க கோரிக்கை
மேலப்பாளையம் மண்டலத்தை பிரித்து நகராட்சியாக அறிவிக்க கோரிக்கை
திருநெல்வேலி : மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரியும், வரி உயர்வுகளை ரத்து செய்யவும், மேலப்பாளையம் மண்டலத்தை மீண்டும் நகராட்சியாக அறிவிக்கவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அரசு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அளித்துள்ள மனுவில், 'நெல்லை மாநகராட்சியின் மண்டலங்களில் ஒன்று மேலப்பாளையம்.
போதிய பராமரிப்பு இல்லாத பொது குடிநீர் விநியோகத் திட்டம், மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் திட்டம் இல்லாமை, தண்ணீருக்காக அலையும் மக்கள், நள்ளிரவில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அலைக்கழிக்கப்படும் மக்கள் என பல்வேறு பிரச்னைகள் உள்ளன.கொண்டாநகரத்தில் குழாய்களை வேண்டுமென்றே உடைத்து வயல்வெளிக்கு பாய்ச்சுதல், பழுதடைந்து போன குழாய்களால் தண்ணீர் வெளியேறும் அவலம், வீணாகும் தண்ணீரால் சேதமடையும் ரோடுகள் போன்ற பிரச்னைகளும் உள்ளன.மேலப்பாளையம் சந்தைக்கு செல்லும் ரோட்டில் 5 ஆண்டுகளாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குடிநீர், ரோடு, சுகாதார வசதி எதையும் சரிசெய்யாமல் வரிமட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணமும் உயர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய வீடுகளுக்கும் வரி அதிக அளவில் விதிக்கப்படுவதால் சொந்த வீடு வைத்திருப்பவர்களும் வாடகை செலுத்துவது போல வரி செலுத்தவேண்டியுள்ளது. பாதாள சாக்கடை வைப்புத் தொகையும், அதற்கான கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் வரியை மட்டும் அதிகமாக வசூலிக்கிறது மாநகராட்சி. சுகாதாரக்கேடுகளால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சுகாதாரப்பணியாளர்கள் குறைவாக உள்ளதால் பணிகளும் முறையாக நடக்கவில்லை.அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வசதியாக மேலப்பாளையம் மண்டலத்தை, மாநகராட்சியில் இருந்து பிரித்து நகராட்சியாக மாற்றவேண்டும்.இவ்வாறு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.